தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு: ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) இன்று அறிவித்துள்ளது.

ஜூலை 07, 2024 அன்று, இலங்கை கிரிக்கெட் (SLC) அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூர்ய தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக அவர் பணியாற்றினார்.

முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட்டிற்கு மாற்றீட்டிற்கான தேடலை இலங்கை கிரிக்கெட் தொடர்ந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட மோசமாக தோல்வியை தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜயவர்த்தனே ஆகியோர் பதவி விலகினர்.

இதனை தொடர்ந்து இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS