ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.
ஆனால் அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன.