கொழும்பு – யாழ் ரயில் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!

வடக்கு ரயில் பாதையின் மாஹோ-அநுராதபுரம் பகுதி நவீனமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை ஒக்டோபர் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாவது ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறைக்கு புறப்படும். மேலும் அடுத்த ரயில் மதியம் 1.45 மணிக்கு புறப்படும்.

எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் வடக்குப் பாதையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், லெவல் கிராசிங்குகளைப் பயன்படுத்தும்போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும். மேலும், கொழும்பு நோக்கிச் செல்லும் மற்றுமொரு ரயில் காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும்.

LATEST NEWS