முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றும் முன்னால் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.