நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்கள் ஒக்டோபர் நான்காம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.